×

அரியலூர் சித்தேரியில் மீன்கள் இறந்து மிதந்தன

அரியலூர் : அரியலூர் தெற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சித்தேரி உள்ளது. ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் நேற்று ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதி வழியாக சென்றால் ஏதேனும் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் அயல் நாட்டு பறவைகள் ஏரியில் வாழ்வதால் அப்பறவைகள் இறந்து கிடக்கும் மீன்களை சாப்பிட்டால் பறவைகளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் உள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஏரிகள் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கடுமையான வெயில் காரணமாக அல்லது வேறு நாசவேலை ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ariyalur Chidderi , Ariyalur, Fish dead,Chitheri Eri
× RELATED சபரிமலை அருகே தமிழக பக்தர்கள் சென்ற...